இளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடிய பிக் பாஸ் மீரா - வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 07, 2019 11:11 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் இளைஞர் ஒருவருடன் பப்பில் டான்ஸாடும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மீரா மிதுன், ஹவுஸ்மேட்ஸ்களுடன் கொஞ்சமும் ஒத்துப்போகாமல் விதண்டாவாதம் செய்து வந்தார்.
நாள் தோறும் ஒரு பிரச்சனையை கிளப்பி வந்தார். இதன் உச்சக்கட்டமாக டாஸ்க் ஒன்றின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மீராவின் குற்றச்சாட்டால் கதிகலங்கிப்போனார் சேரன். மீராவை தவறான நோக்கத்தில் தொடவில்லை என்று குழந்தைகள் மீதும் சத்தியம் செய்தார்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத மீரா தொடர்ந்து சேரன் மீது புகாரைக் கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கண்ணீர்விட்டு கதறினார்.
இதைத்தொடர்ந்து குறும்படம் போட்டு மீராவின் குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபித்தார் கமல்ஹாசன். அப்போதும் அடங்காத மீரா உண்மை ஒருநாள் வெளியே வரும் என்று கமலிடமே வசனம் பேசினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி அவர் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸிலிருந்து வெளியேறியது முதல் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவது, ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது என இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர் ஒருவருடன் பப்பில் டான்ஸாடுகிறார் மீரா மிதுன்.
My world of dance... Refreshing 💖 pic.twitter.com/3FXZAifXRG
— Meera Mitun (@meera_mitun) August 6, 2019
இளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடிய பிக் பாஸ் மீரா - வீடியோ இதோ! வீடியோ