''இவரே ஆப்பு வைப்பாராம் அத அவரே...' - சரவணன் விவகாரத்தில் பிரபல நடிகர் சாட்டையடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 07, 2019 12:02 PM
பிக்பாஸில் மீரா மிதுன் - சேரன் விவகாரத்தின் போது பஸ்ஸில் பயணம் செய்வது குறித்து சரவணனின் கருத்து சர்ச்சைக்குள்ளானது. அதன் தண்டனை வழங்கும் விதமாக நீண்ட...நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் சரவணனை வெளியேற்றியது.

இதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சரவணன் வெளியேறியதை பிக்பாஸ் அறிவித்தார். அதனை கேட்ட, சாண்டி, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் கதறி அழுதனர். மேலும், மதுமிதா, சாக்ஷி உள்ளிட்டோரும் மிகவும் வருத்தப்பட்டனர்.
இந்நிலையில் நடன இயக்குநரும் நடிகருமான சதீஷ் கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் 'இவங்களே நாமினேட் பண்ணுவாங்களாம். எவிக்ட் ஆனா அழுவாங்களாம். என்னமா காமெடி. சாண்டி மட்டுமே சரவணனுக்காக உண்மையாக அழுதார். மற்றவர்கள் எல்லாம் வோட்டிற்காக நடிக்கிறார்கள்' என்றார்.
Evanga nominate pannuvangallam evict anna azhuvangalam enna ma comedy . Sandy feeling for saravannan is only genuine rest all trying to fish for some votes . #BiggBossTamil3
— Sathish krishnan (@dancersatz) August 7, 2019