ஷங்கரின் மாஸ்டர் Plan? இந்தியன் 2 ரிலீஸ் குறித்த தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 08, 2019 10:41 AM
கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் திடீர் என்று விலக தற்போது ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஷங்கருடன் ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 2021 கோடைக்கால விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்கிறதாம். அதே 2021 மே மாதம்தான் தமிழக சட்டப்பேரவை தேர்தலும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. முதல் ஷெடியூலில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி ஷங்கரின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினம், ஹைதராபாத்தில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்காக இயக்குநர் ஷங்கர் தனது குழுவுடன் ஆந்திராவில் லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைகா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.