வெந்த புண்ணுல வேல் பாச்சணுமா ? - கவின் விவகாரம் குறித்து பேசிய கஸ்தூரி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 30, 2019 07:48 PM
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியின் மூலம் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதுவரை காதல், மோதல், சிறு சிறு பிரச்சனைகள் என இருந்த பிக்பாஸ் வீடு ஒரு பிரளயமே வெடிக்கும் அளவுக்கு மாறியது.
![Kasthuri speaks about Kavin Losliya, Kamal Haasan Bigg Boss 3 Kasthuri speaks about Kavin Losliya, Kamal Haasan Bigg Boss 3](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kasthuri-speaks-about-kavin-losliya-kamal-haasan-bigg-boss-3-photos-pictures-stills.jpg)
கவின் மற்றும் வனிதாவுடன் முட்டல், மோதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, அவர் எது சொன்னாலும் சர்ச்சையானது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்ட அவருக்கு கமல் சீக்ரெட் ரூம் பற்றி தெரிவித்தார். ஆனால் கஸ்தூரி அதனை மறுத்தார்.
தற்போது வெளியே வந்த அவர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கவின் அவரை பட்டப்பெயர் வைத்து அழைத்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கவின் மற்றும் கவின் பெற்றோர்களுடைய செய்திகள் இன்றைக்கு தலைப்பு செய்தி. ஏற்கனவே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சனுமா? என்று என் கண்ணியம் என்னை தடுக்கிறது.
ஒருத்தரை பற்றி தப்பா பேசக்கூடாதுனு எனக்கு இருக்கு இல்லையா?, அது எல்லோருக்கும் இருக்கணும் என்பது என்னுடைய ஏமாளித்தனம். நானும் ஒருத்தவங்களை பற்றி தவறாக பேசுனா எனக்கும் அவங்களுக்கு என்னங்க வித்தியாசம். நான் அந்த மாதிரி கேரக்டர் கிடையாது.என்றார்.
வெந்த புண்ணுல வேல் பாச்சணுமா ? - கவின் விவகாரம் குறித்து பேசிய கஸ்தூரி வீடியோ