என்னை விட்டு நீ போகாதே..! ஷெரினுக்காக தர்ஷன் பாடிய பாடல் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 30, 2019 10:14 AM
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ( 30.09.2019) முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் கவின் லாஸ்லியா கவின் சாக்ஸி முகில் அபிராமியின் காதல் எபிசோடுகளை தொடர்ந்து தற்போது தர்சன் ஷெரின் காதல் தொடங்கியுள்ளது.
இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தான் இருப்பதால் தான் வெளியேற வாய்ப்பு இருப்பதாக ஷெரின் கூற, அதற்கு தர்ஷன், நீ போய்விட்டால் எனக்கு ஜாலி என கலாய்க்கின்றார். பின்னர் 'விழியின் ஓரம் இருந்து நீ விலகாதே நொடியும் என் மனம் தாங்காதே' என ஒரு பாடலை பாடுகிறார். இந்த பாடலை கேட்டதும் சரின்னு வெட்கப்பட்டு செல்வதுபோல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இந்த வாரம் எரிக்சன் பிராசஸ் கிடையாது என்பதை போன ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கமல் ஹாசன் கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை விட்டு நீ போகாதே..! ஷெரினுக்காக தர்ஷன் பாடிய பாடல் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ