பிக் பாஸ் கவின் தாயாருக்கு ஏழு ஆண்டு ஜெயில் விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Gokul | Aug 30, 2019 09:29 AM
பிரபல தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துள்ள கவின் தாயாரை சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி திருச்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கவின் தாயார் உள்பட 3 பேர் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்தததாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த தீர்ப்பில் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் போட்டியாளர் கவின் தாயார் உள்பட மூன்று பெண்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே கவின் தான் கடனை அடைப்பதற்காக தான். தாய் தந்தையை தனியாக வீட்டில் விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி வந்திருக்கிறேன் என்றும் ஒரு எபிசோடில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.