'பேட்ட'க்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூடன் தனுஷ் இணையும் படத்தின் முக்கிய அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 30, 2019 06:44 PM
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'அசுரன்'. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதனையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இந்த படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவிருப்பதாகவும், தொடர்ந்து 55 நாட்கள் அங்கு படமாக்கப்படவிருப்பதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
Tags : Dhanush, Karthik Subbaraj, Aishwarya Lekshmi