பிக்பாஸ் காதல் மன்னன்..! வில்லுப்பாட்டில் கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 29, 2019 09:54 AM
பிக்பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களில் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் பேசப்பட்டுள்ளது. முதலில் நான்கு பேர்களிடமும் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த கவின், அதன்பின் ஒரு கட்டத்தில் சாக்சியிடம் மிகவும் நெருக்கமானார். ஆனாலும் லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாக்சிக்கு கவின் மீது வெறுப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் கவின் - சாக்சி காதல் உடைந்து சாக்சியும் வீட்டை விட்டு வெளியேறினார்

இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி வரும் கவின், கிட்டத்தட்ட திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய கிராமத்து டாஸ்க்கில் வில்லுப்பாட்டு ஒன்றை சாண்டி பாடி கவினின் காதலை கலாய்க்கின்றார். சாண்டியின் பாடலுக்கு ஆமாம், ஆமாம் என்று கோரஸ் போடுகின்றனர் முகின், வனிதா, லாஸ்லியா குழுவினர்
கவின் காதல் குறித்து சாண்டி பாடும் ஒவ்வொரு வரியின்போதும் கவின் வெட்கத்தால் சிரிக்கின்றார்.
பிக்பாஸ் காதல் மன்னன்..! வில்லுப்பாட்டில் கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ