'எனக்கு பிடித்தது' - செல்வராகவன் - சூர்யாவின் 'என்ஜிகே'வை பாராட்டிய 'பேட்ட' பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பீட்சா', 'ஜிகர்தண்டா' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Karthik Subbaraj praised Suriya and Selvaraghavan's NGK

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் 'என்ஜிகே' திரைப்படம் குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,  'என்ஜிகே' திரைப்படம் நடப்பு அரசியலை மிகத் தைரியமாக பேசியிருந்தது. எல்லா காட்சியிலும் செல்வராகவன் சாரின் தனித்துவம் இருந்தது. மேலும் மிகவும் சிறப்பான நடிப்பை சூர்யா வழங்கியிருந்தார். எனக்கு பிடித்தது' என்று தெரிவித்திருந்தார்.

பின்னர் இதற்கு செல்வராகவன் நன்றி தெரிவித்திருந்தார். அதற்கு கார்த்திக் சுப்பராஜ் அளித்த பதிலில் , 'நான் உங்களின் மிகப்பெரிய ரசிகர். இந்த மாதிரி படங்களை தொடர்ந்து எடுங்கள்' என்று தெரிவித்தார்.