ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'பாபநாசம்'. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து மலையாள இயக்குநரான ஜீத்து ஜோசஃப் தமிழில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இந்த படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் நடிக்கவிருக்கிறார்களாம்.
இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தி, ஜோதிகாவின் சகோதரியாக நடிக்கிவிருப்பதாக செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
நடிகர் கார்த்தி தற்போது 'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் இயக்கும் 'கைதி' என்ற படத்தில் நடித்துவருகிறார். அதனைத் தொடர்ந்து ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.