ஹிப்ஹாப் தமிழா இசையில் சிவகார்த்திகேயனுக்காக அனிருத் பாடிய 'மிஸ்டர் லோக்கல் பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உள்ளிட்ட காமெடி படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராஜேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'மிஸ்டர் லோக்கல்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

First single from Sivakarthikeyan and Hiphop Tamizha's Mr.local Sung by Anirudh

ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அனிருத் பாடிய டக்குனு டக்குனு என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. எதிர் நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் அனிருத் இசையில் ஹிப்ஹாப் தமிழா  பாடல்கள் பாடியிருந்தார்.

கடைசியாக இருவரும் இணைந்து கத்தி படத்தில் பணிபுரிந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா இசையில் சிவகார்த்திகேயனுக்காக அனிருத் பாடிய 'மிஸ்டர் லோக்கல் பாடல் இதோ வீடியோ