சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஷபீர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
— Rio raj (@rio_raj) April 14, 2019
இந்த #firstlook உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க..
அப்படியே இந்த நல்ல நாள்ல எங்களுக்கு ஆசீர்வாதமும் பண்ணுங்க 🙏🙂#NenjamunduNermaiyunduOduRaja #NNORFirstLook pic.twitter.com/bBa1xYo9Ot