இந்த சிவகார்த்திகேயன் படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் உழைப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

Sivakarthikeyan's Nenjamundu Nermaiyundu Odu Raja First look released from tomorrow 12PM

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' . இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை(ஏப்ரல் 14)  நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் இருந்து டக்குனு டக்குனு என்ற பாடல் வெளியாகி வைரலாகியது.