பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சர்ச்சை கருத்துக்கு பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதில் அளித்துள்ளார்.

பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய மீடூ குற்றச்சாட்டுக்கள் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சின்மயிக்கு ஆதரவாகும், வைரமுத்துவிற்கு ஆதரவாகவும் திரைத்துறையினர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், 15 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக சொல்லும் விஷயத்தை இப்போது பேசவதனால் உன்னுடைய நோக்கம் என்ன என பாடகி சின்மயியிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். பேச வைரமுத்து போன்ற பெருமைக்குரியவர்களை சீப் பப்ளிசிடிக்காக கெடுத்துவிடாதீர்கள்.. கஷ்டப்பட்ட உருவாக்கிய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக் கொள்வதால் என்ன பயன் இருக்கிறது என பாடகி சின்மயியிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், தன்னிடமும் பெயரை கெடுப்பதற்கு ஆள் இருப்பதாக மிரட்டும் தொனியில் கே.ராஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள பாடகி சின்மயி, சிதைக்க ஆள் எல்லாம் வெச்சிருக்காராமே..? பயப்படனுமா? என காட்டாமாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதே நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் ரீதியான் தொந்திரவுகள் இருப்பதை மறுக்க முடியாது. குற்றச்சாட்டுகளை வைப்பதால் பெண்கள் குற்றவாளிகள் ஆக்கப்படுவதை கண்டிக்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.
Producer K Rajan and his open threat to deal with for naming Mr Vairamuthu.
— Chinmayi Sripaada (@Chinmayi) April 14, 2019
Sidhaikka aal ellam vechurkkaarame. Bayappdnuma? pic.twitter.com/D6MBqU5sRb