தமிழில் ‘தூத்துக்குடி’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கார்த்திகா, ‘கருவாப்பையா கருவாப்பையா’ பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

அதைத் தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா, தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.
தற்போது சென்னை திரும்பிய கார்த்திகா, வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு சென்றபோது, அவரை பார்த்த ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என அடையாளம் கண்டு கொண்டு, அவரை சூழ்ந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும், ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருப்பது கண்டு மகிழ்ந்த கார்த்திகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.
பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தும், திரைப்படங்களில் தான் நடிப்பேன் என உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குநர்களும் பேசி வருகிறார்கள்.
நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கார்த்திகா கூறுகிறார்.