தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான கன்னட படமான 'கேஜிஃஎப்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ஹீரோ யாஷ்க்கு நிகராக வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார் கருடா ராம்.

இந்நிலையில் இவர் 'ரெமோ' இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு தயாரிக்கவிருக்கின்றனர்.
கார்த்தி நடிப்பில் கடைசியாக 'தேவ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.