www.garudabazaar.com

பிரபல இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் கார்த்தி.. வெளியான சூப்பர் தகவல்!!.. ஷூட்டிங் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகம் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.

Karthi and nalan kumarasamy next movie update deets

Also Read | "நாள் நெருங்க நெருங்க".. "எரிமலை எப்படி பொறுக்கும்".. Freeze ஆகி நின்ற ரச்சிதா?.. ADKவின் கமெண்ட் 😅!!

அதிலும் அவருக்கு 2022 ஆம் ஆண்டு, திரை பயணத்தில் சிறந்த வருடமாகவும் இது அமைந்திருந்து. முத்தையா இயக்கத்தில் அவர் நடித்திருந்த 'விருமன்' திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் 1, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி,  குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வித்தியாசமான லுக்கில் கார்த்தி இருந்தது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

Karthi and nalan kumarasamy next movie update deets

அதே போல, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் அடுத்த திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சூது கவ்வும் திரைப்படம் இயக்கி தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி கொண்டவர் இயக்குனர் நலன் குமாரசாமி. குறும்படங்கள் இயக்கி பெயர் பெற்ற நலன், இந்த படத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இதே போல, குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜியின் ஒரு பகுதியையும் நலன் இயக்கி இருந்தார்.

Karthi and nalan kumarasamy next movie update deets

இதற்கடுத்து, தற்போது நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றையும் நலன் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, பிப்ரவரி 20 ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Also Read | 50 MILLION பார்வையாளர்களை நோக்கி துணிவு டிரெய்லர்.. எடிட்டர் விஜய் பகிர்ந்த வைரல் TIMELINE PHOTO!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi and nalan kumarasamy next movie update deets

People looking for online information on Karthi, Nalan Kumarasamy will find this news story useful.