www.garudabazaar.com

"என்னுடைய தம்பி, தங்கைகளுக்கு".. நடிகர் கார்த்தியின் நெகிழ்சியான புத்தாண்டு வாழ்த்து..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

Actor Karthi Emotional Post to wish fans happy New Year

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தன. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் கார்த்தி. அதேபோல, PS.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் படத்திலும் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"எனது ரசிகர்கள், திரையுலகப் பிரியர்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களாக நான் கருதும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களின் அன்பால் இந்த ஆண்டு வெளியான என்னுடைய விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று படங்களும் வெற்றிபெற்றன"

"எனது படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்த வணிக வெற்றிக்கான பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில், என்னுள் இருக்கும் கலைஞன் பெருமைப்படும் அளவுக்கு சவாலான சர்தார் மற்றும் வந்தியத்தேவன் போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்தது பெருமையாக இருந்தது"

"உழவன் அறக்கட்டளை மூலமாக நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பை வழங்க உதவியாக இருந்த எனது தம்பி, தங்கைகள் செய்த பாராட்டுக்குரிய பணிக்காக நான் பெருமைப்படுகிறேன். 2023 மற்றும் வரும் வருடங்களில் எனது ரசிகர்களையும் திரைப்பட பார்வையாளர்களையும் தரமான படங்களுடன் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உங்களுடைய ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi Emotional Post to wish fans happy New Year

People looking for online information on Actor, Karthi, New year, Ponniyin Selvan will find this news story useful.