www.garudabazaar.com

அஜித் நடிக்கும் AK62.. டான்ஸ் மாஸ்டராக படத்தில் இணைந்த BIGG BOSS அமீர்?.. VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

BiggBoss Amir is Choreographer for Ajith Kumar AK 62 Sources

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

நேர்கொண்ட பார்வை & வலிமை படங்களுக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

BiggBoss Amir is Choreographer for Ajith Kumar AK 62 Sources

இந்த துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனலும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி 17 அன்று தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் AK61 படத்தில் பிக்பாஸ் அமீர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமீர் ஏற்கனவே நடிகர் அஜித் உடன் துணிவு படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடன கலைஞரான அமீர் பல நிகழ்ச்சிகளில் நடனம் அமைத்தவர் ஆவார். மேலும் அமீர், ஊட்டியில் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிக்கும் AK62.. டான்ஸ் மாஸ்டராக படத்தில் இணைந்த BIGG BOSS அமீர்?.. VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Amir is Choreographer for Ajith Kumar AK 62 Sources

People looking for online information on Ajith Kumar, AK62, Amir, Biggboss will find this news story useful.