www.garudabazaar.com

திருமணமாகி ஒரு மாதம்.. கௌதம் கார்த்திக்கை டேக் செய்து மஞ்சிமா நெகிழ்ச்சியான பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் முடிந்து ஒரு‌ மாதம் ஆவதையொட்டி நெகிழ்ச்சியான பதிவிட்டுள்ளார்.

Gautam Karthik Manjima Mohan One Month Wedding Anniversary

Also Read | "இது தான் தளபதி".. சாண்டி மாஸ்டருக்கு நடிகர் விஜய் கொடுத்த கிஃப்ட்.. நெகிழ்ச்சி பதிவு!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Gautam Karthik Manjima Mohan One Month Wedding Anniversary

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Gautam Karthik Manjima Mohan One Month Wedding Anniversary

நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

Gautam Karthik Manjima Mohan One Month Wedding Anniversary

இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு‌ மாதம் ஆவதையொட்டி நடிகை மஞ்சிமா மோகன் இதுவரை வெளிவராத திருமண புகைப்படத்தை பகிர்ந்து கௌதம் கார்த்திக்கை டேக் செய்து "ஒரு மாதம் நிறைவடைந்தது. வாழ்நாள் முழுவதும் செல்ல வேண்டி உள்ளது" என மஞ்சிமா மோகன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Also Read | தளபதி 67 படத்தில் இணைந்த பீஸ்ட் படத்தின் பிரபல டெக்னீசியன்?.. போடு வெடிய! செம்ம COMBO!

தொடர்புடைய இணைப்புகள்

Gautam Karthik Manjima Mohan One Month Wedding Anniversary

People looking for online information on Gautam Karthik Manjima Mohan, Gautham Karthik, Manjima Mohan, One Month Wedding Anniversary will find this news story useful.