www.garudabazaar.com

EXCLUSIVE: லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன்?.. உத்தமவில்லனுக்காக மீண்டும் ஒரு புதிய படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக கதாநாயகனாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

Kamal Haasan promised to do a film for Thirrupathi Brothers

Also Read | "நாள் நெருங்க நெருங்க".. "எரிமலை எப்படி பொறுக்கும்".. Freeze ஆகி நின்ற ரச்சிதா?.. ADKவின் கமெண்ட் 😅!!

கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

தற்போது விக்ரம் படத்தினை தொடர்ந்து கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

Kamal Haasan promised to do a film for Thirrupathi Brothers

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Kamal Haasan promised to do a film for Thirrupathi Brothers

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது.

இந்தியன் 2 படத்தினை தொடர்ந்து கமல், மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan promised to do a film for Thirrupathi Brothers

இந்நிலையில் பிகினிங் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் & இயக்குனர் லிங்குசாமி மீண்டும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்து கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய லிங்குசாமி, "உத்தம வில்லன் படத்தின் இழப்பை ஈடு செய்ய,   ஒரு படம் செஞ்சு தரேன்னு கமல் சார் சொல்லிருக்காங்க. கமல் சார் நட்பு தொடருது. 4 மாதம் முன்ன கமல் சாரை சந்தித்துள்ளேன். மறுபடியும் மீட் பண்ணி ஒரு சரியான படம் கமல் சார் பண்ணுவார்னு நம்புறோம்". என லிங்குசாமி பேசினார்.

Also Read | "உத்தமவில்லனுக்கு பதில் பாபநாசம் தான் பண்ண வேண்டியது"..- மனம் திறந்த லிங்குசாமி

EXCLUSIVE: லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன்?.. உத்தமவில்லனுக்காக மீண்டும் ஒரு புதிய படம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan promised to do a film for Thirrupathi Brothers

People looking for online information on Kamal Haasan, Lingusamy, Thirrupathi brothers will find this news story useful.