www.garudabazaar.com

மகள் அனோஷ்காவின் பிறந்தநாள்.. வாழ்த்தி ஷாலினி அஜித்குமார் பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

Shalini Ajith posted daughter Anoushka Birthday wish

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் நடித்துள்ளார். பிக்பாஸ் பவனி அமீர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

Shalini Ajith posted daughter Anoushka Birthday wish

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும் கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களையும் அப்போது வெளியிட்டு இருந்தார். பின்னர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அஜித்குமார் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதில் நடிகர் அஜித் குமார், மகள் அனோஷ்கா ஆகியோருடன் ஷாலினி இருக்கிறார். மேலும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் ஷாலினி அஜித்குமார் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித் - ஷாலினியின் மகள் அனோஷ்காவின் 15-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாலினி, "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங்" என‌ பதிவிட்டுள்ளார். மேலும் மகள் அனோஷ்கா உடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Shalini Ajith posted daughter Anoushka Birthday wish

People looking for online information on Ajith Kumar, Anoushka, Shalini will find this news story useful.