Viruman Logo Top
www.garudabazaar.com

நம்ம ஊரு.. நம்ம கதை... கார்த்தி வெளியிட்ட 'விருமன்' படத்தின் புதிய GLIMPSE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Karthi Aditi Shankar Viruman Movie New Promo Video

Also Read | அஜித் நடிக்கும் AK61.. படத்தில் இணைந்த பிரபல யூடியூப் நடிகை! வைரல் BTS போட்டோ!

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி 'விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் நாளை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

இந்த படத்தின் அமெரிக்கா ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான பிரைம் மீடியா நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா உரிமத்தை பார்ச்சூன் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Karthi Aditi Shankar Viruman Movie New Promo Video

இந்நிலையில் நாளை படத்தின் ரிலீஸை ஒட்டி புதிய ப்ரோமோ & போஸ்டரை படக்குழு சார்பில் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நம்ப ஊரு.. நம்ப மனிதர்கள்.. நம்ப கதை.. நாளை முதல் விருமன்" என கார்த்தி பதிவிட்டுள்ளார்.

Karthi Aditi Shankar Viruman Movie New Promo Video

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கி முடித்துள்ளார்.

Karthi Aditi Shankar Viruman Movie New Promo Video

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி படப்பிடிப்பு முடிவடைந்தது.

 

Also Read | சிம்பு - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'பத்து தல'.. வைரலாகும் சிம்புவின் மாஸ் லுக்! வைரல் BTS!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Aditi Shankar Viruman Movie New Promo Video

People looking for online information on Aditi Shankar, Karthi, Viruman Movie, Viruman Movie Updates will find this news story useful.