Viruman Logo Top
www.garudabazaar.com

விருமன் படத்திற்காக களமிறங்கிய அதிதி ஷங்கர்..பிரபல போட்டோகிராபருடன் போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‍ Aditi Shankar Photoshoot with Kiran SA for Viruman Movie Promotions

Also Read | காமன்வெல்த் அரங்கில் மாஸ் காட்டிய யுவன் பாடல்.. வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்!!.. Viral வீடியோ

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.  விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

‍ Aditi Shankar Photoshoot with Kiran SA for Viruman Movie Promotions

மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம், தேனி பகுதியில் தொடங்கப்பட்டது.  மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

‍ Aditi Shankar Photoshoot with Kiran SA for Viruman Movie Promotions

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.  படத்தின் ரிலீஸை ஒட்டி படக்குழு பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். இதற்காக நடிகை அதிதி ஷங்கர், போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராபர் கிரண் எடுத்துள்ளார்.

‍ Aditi Shankar Photoshoot with Kiran SA for Viruman Movie Promotions

மேலும் அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்  துவங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படமாகும். அது போக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‍ Aditi Shankar Photoshoot with Kiran SA for Viruman Movie Promotions

‍ Aditi Shankar Photoshoot with Kiran SA for Viruman Movie Promotions

Also Read | முதல்வர் ஸ்டாலின் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள்! CUTE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

‍ Aditi Shankar Photoshoot with Kiran SA for Viruman Movie Promotions

People looking for online information on Aditi Shankar, Aditi Shankar Latest Photoshoot will find this news story useful.