Viruman Logo Top
www.garudabazaar.com

நடனத்தின் நடுவே அமீர் & பாவனிக்கு டும்.. டும்.. டும்.. செம performance.. BB Jodigal 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள்.  ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

BB Jodigal 2 Amir Pavani Marriage new promo viral

Also Read | அஜித் நடிக்கும் AK61.. படத்தில் இணைந்த பிரபல யூடியூப் நடிகை! வைரல் BTS போட்டோ!

மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வித்தியாசமான முறையில் உருவாக்கி வரும் விஜய் டிவி, பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தது.

இதுவரை ஐந்து சீசன்களாக நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். கடைசி சீசனில் ராஜூ வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரும சில வேளைகளில் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

BB Jodigal 2 Amir Pavani Marriage new promo viral

இந்த நிலையில்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை மையமாக வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற புதிய ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது. இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, இதனுடைய இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

BB Jodigal 2 Amir Pavani Marriage new promo viral

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் மாஸ்டர் இணைந்து இருக்கின்றனர். இதில்தான் தற்போது அமீர் மற்றும் நடனமாடி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் பொருத்தவரை அமீர் தனக்கு பாவனியின் மீது கிரஷ் இருப்பதாக சொல்லிக் கொண்டு வந்தார். இருவரும் தற்போது நல்ல நண்பர்களாக இருந்து வரும் நிலையில், பாவனியை பல இடங்களில் டான்ஸ் ஆடும் போது புரபோஸ் செய்துள்ளார் அமீர்.

BB Jodigal 2 Amir Pavani Marriage new promo viral

இந்த நிலையில் தற்போது பாவனியுடன் அமீர் புதிய நடனத்தை ஆடியிருக்கிறார். அதில் இருவருக்கும் திருமணமாக கூடிய காட்சிகள் இடம் பெறுகின்றன. அதன்படி தாலி கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது, தலையில் அப்பளம் உடைப்பது, அட்சதை போட்டுக் கொள்வது உள்ளிட்ட காட்சிகள் இவர்கள் இருவருக்குமானதாக இடம் பெறக்கூடிய புதிய புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read | Breaking : 'ஜெயிலர்' படத்தில் இணைந்த பிரபல ரஜினயின் மெகா ஹிட் பட நடிகை?..

தொடர்புடைய இணைப்புகள்

BB Jodigal 2 Amir Pavani Marriage new promo viral

People looking for online information on Amir, Amir pavani, Amir Pavani Marriage, Amir Pavani Wedding, Bb jodigal 2, Bigg Boss Tamil, Pavani, Vijay Television will find this news story useful.