Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

கார்த்தி நடிக்கும் அடுத்த பட டைரக்டர் இவரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்.. இது செம Combo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் அடுத்த 24 வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Director Raju Murugan confirms his next film with Karthi

Also Read | BREAKING: ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. மைசூர் படப்பிடிப்பின் வேற லெவல் அப்டேட்!

கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருமன் படம் இந்த வாரம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director Raju Murugan confirms his next film with Karthi

சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக 'சர்தார்' ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Raju Murugan confirms his next film with Karthi

இந்நிலையில் கார்த்தி, இயக்குனர் ராஜூமுருகனுடன் தனது அடுத்த 24வது படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இச்சூழலில் விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ராஜூ முருகன் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். விருமன் படத்தில் மதுரை வீரன் பாடலை ராஜூ முருகன் எழுதியது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளரும், இயக்குனருமான ராஜூ முருகன் கடந்த 2014 ஆம் ஆண்டு குக்கூ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய இரண்டாவது படம் ஜோக்கர். இது சமூகத்தை கேள்வி கேட்கும் நாயகனின் கதை. தேசிய விருதை வென்ற இந்தப் படம் பெரும்பான்மையான மக்களால் பாராட்டப்பட்டது. கடைசியாக ஜிப்சி படத்தை ராஜூ முருகன் இயக்கினார்.

Director Raju Murugan confirms his next film with Karthi

இந்த புதிய படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது என‌ நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | "Mass-னா என்ன? திருச்சிற்றம்பலம் Mass படமா?" - இசை விழாவில் தனுஷ் புது விளக்கம்.!

கார்த்தி நடிக்கும் அடுத்த பட டைரக்டர் இவரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்.. இது செம COMBO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Raju Murugan confirms his next film with Karthi

People looking for online information on Karthi, Raju murugan, Viruman Movie will find this news story useful.