Viruman Logo Top
www.garudabazaar.com

சிம்பு - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'பத்து தல'.. வைரலாகும் சிம்புவின் மாஸ் லுக்! வைரல் BTS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Silambarasan Pathu Thala Power Packed Bellary schedule is wrapped

Also Read | Breaking : 'ஜெயிலர்' படத்தில் இணைந்த பிரபல ரஜினயின் மெகா ஹிட் பட நடிகை?..

கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம், 100 கோடிக்கும் மேல்  வசூலித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள "வெந்து தணிந்தது காடு" திரைப்படம், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை  கவர்ந்தந்திருந்தது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

Silambarasan Pathu Thala Power Packed Bellary schedule is wrapped

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. தொடர்ந்து, பத்து தல படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் சிலநாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Silambarasan Pathu Thala Power Packed Bellary schedule is wrapped

அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் சிம்பு, பிரியா பவானி சங்கர் & கௌதம் கார்த்திக் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது படக்குழு படத்தின் படப்பிடிப்பில் எடுத்த BTS புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் இயக்குனர் கிருஷ்ணா சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்கிற்கு படக்காட்சியை விளக்குவது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன. மேலும் பெல்லாரி படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

Silambarasan Pathu Thala Power Packed Bellary schedule is wrapped

பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | அஜித் நடிக்கும் AK61.. படத்தில் இணைந்த பிரபல யூடியூப் நடிகை! வைரல் BTS போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan Pathu Thala Power Packed Bellary schedule is wrapped

People looking for online information on Pathu Thala Movie, Pathu thala Movie updates, Priya Bhavani Shankar, Silambarasan TR will find this news story useful.