Kaateri logo top
www.garudabazaar.com

"எனக்கும் City சப்ஜெக்ட் பண்ண ஆசை".. "அடுத்த படம் இப்படி இருக்கும்.!" - Hint கொடுத்த முத்தையா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Karthi Viruman Muthaiah hint about his next movie

இயக்குநர் முத்தையாவுடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்கிறது.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களிடையே பேசிய இப்படத்தின் இயக்குநர் முத்தையா, “எனது அடுத்த திரைப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகிறது என்பது உறுதியாகிவிட்டது. 

நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அப்படியான கதைக்களங்கள் பிடித்திருக்கிறது. அதையே நானும் பண்ணுகிறேன். என் படங்கள் சொந்தங்கள், உறவுகளை பேசக்கூடிய படங்களாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பின்புலத்தை பற்றி சொல்லும்போது கொஞ்சம் மாறினாலும் அது இன்னும் தவறாகிவிடும். அதனால் நான் எனக்கு தெரிந்த, நான் பார்த்த வாழ்வியல் பின்னணியில் படங்களை எடுக்கிறேன். அது சார்ந்த மக்களுக்கும் அதை சரியாக காட்டவில்லை என்கிற வருத்தம் இருப்பதாக பதிவு செய்யவே செய்கிறார்கள். 

எனக்கும் நகரத்து பின்னணியில் படம் பண்ண ஆசை இருக்கிறது. ஆனால் இப்போது வரைக்கும் ஒரு உதவி இயக்குநர் முதல் படம் பண்ணுவது போலேயே நான் அதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி நானும் வருஷம் 16, பூவே உனக்காக போல் படம் பண்ணவே ஆசைப்படுகிறேன்!” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Viruman Muthaiah hint about his next movie

People looking for online information on Aditi Shankar, Karthi, Muthaiah, Viruman will find this news story useful.