அனிருத் வாசித்த சூப்பர் ஹிட் மியூசிக்..! - இசையில் மயங்கிய பாலிவுட் முன்னணி இயக்குநர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் வாசித்த இசையை கேட்டு, பாலிவுட் முன்னணி இயக்குநர் ட்விட்டரில் அவரை பாராட்டியுள்ளார். 

அனிருத் மியூசிக்கை கேட்டு மயங்கிய பாலிவுட் பிரபலம் | karan johar reacts for anirudh playing kal ho naa ho music

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருபவர் அனிருத். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்துக்கு சூப்பர் ஹிட் ஆல்பம் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த கல் ஹோ நா ஹோ என்ற படத்தின் பின்னணி இசையை தனது பியானோவில் வாசித்த வீடியோவை பகிர்ந்தார். இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் முன்னணி இயக்குநர் கரன் ஜோகர், ''இது ரொம்பவே அழகாக இருக்கிறது'' என பாராட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அனிருத், ''நன்றி சார், இப்படத்தின் இசை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என மிரள செய்கிறது'' என ரிப்ளை கொடுத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள், சீக்கிரம் அனிருத்தை ஒரு பாலிவுட் படத்தில் கமிட் செய்யுங்கள் என கமன்ட் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

அனிருத் மியூசிக்கை கேட்டு மயங்கிய பாலிவுட் பிரபலம் | karan johar reacts for anirudh playing kal ho naa ho music

People looking for online information on Anirudh Ravichander, Kal Ho Naa Ho, Karan Johar, Master will find this news story useful.