www.garudabazaar.com

நானும் தம்பி பிரபுதேவாவும் எப்படி வேணா போய்ருக்கலாம்.. ஆனா.. Bigg Boss-ல் உடைத்த கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBoss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் வெற்றிகரமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

Kamal haasan opens up about Prabhu deva cini field bigg boss

கிராண்ட் ஃபினாலே

இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான கிராண்ட் ஃபினாலே அண்மையில் நடைபெற்றது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் கடைசியாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தனர்.

அதன்படி ராஜூ, பிரியங்கா, நிரூப், அமீர், பாவனி உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டுக்குள் கடைசியாக இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சி அன்று முதலில் நிரூப் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அமீர் மற்றும் பாவனி வெளியேற்றப்பட்டனர்.

Kamal haasan opens up about Prabhu deva cini field bigg boss

ராஜூ வெற்றி

இறுதியாக பிக் பாஸ் வீட்டுக்குள் எஞ்சியிருந்த ராஜூ மற்றும் பிரியங்கா இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல்ஹாசன் பிரியங்கா மற்றும் ராஜூ இருவருடனும் புகைப்படம் எடுததுக் கொண்டார். அதன் பிறகு அவர்களை அங்கிருந்து அழைத்து பிக்பாஸ் அரங்கத்துக்கு வந்து ராஜூவை வெற்றியாளராக கமல் அறிவித்தார்.

என்ன இவரு திடீர்னு ஒத்துகிட்டாரு? அப்ப சீரியல் முடியுதா? பாரதி கண்ணம்மா பரபர ட்விஸ்ட்!

50 லட்சம் ரூபாய்

அதன்பிறகு ராஜூவுக்கு வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் 50 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜே பிரியங்கா ரன்னர் அப்-ஆக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக மற்ற போட்டியாளர்களுடனும் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வகையில் அமீர் எலிமினேட் ஆகி பிக்பாஸ் அரங்கத்துக்கு வருகை தந்த பின்னர் அவரிடம் பேசிய கமல்ஹாசன் அவருக்கு தன்னுடைய அனுபவங்களை கூறியிருந்தார்.

Kamal haasan opens up about Prabhu deva cini field bigg boss

பிரபுதேவா பற்றி பேசிய கமல்

அப்போது அமீரிடம் பேசிய கமல்ஹாசன், “நானும், தம்பி பிரபுதேவாவும் உள்ளிட்ட நாங்கள் எல்லாம் எப்படி வேண்டுமானாலும் போயிருக்கலாம், ஆனால் முதலில் நடனத்தில் எங்களுடைய கால் பதித்து அதன் பிறகு நடிக்க கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டோம். நீங்கள் எல்லாம் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

Kamal haasan opens up about Prabhu deva cini field bigg boss

இந்தியாவில் குரு தத் இருக்கிறார், நான் எல்லாம் பல கஷ்டமான மூவ்மென்ட்டை அவரிடம் இருந்து பார்த்துதான் கற்றுக்கொண்டேன். நானும் தம்பி பிரபு தேவாவும் அந்த மரபில் தான் வருகிறோம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

‘சேலை கட்டுனா’.. தாமரை.. குட்டை கவுன் போட்டா .. ஐக்கி.. ‘ஓ சொல்றியா’ இவங்க வெர்ஷன்!.. வீடியோ

ரசிகர்கள் நெகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பிரபுதேவா பற்றி பேசியது பலருக்கும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் பிரபுதேவாவுடன் இணைந்து, ‘காதலா காதலா’ படத்தில் நடித்திருக்கிறார். 70களில் இருந்து ஹீரோவாக காட்சியளிக்கும் கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக 60களிலேயே அறிமுகமாகி விட்டார். இருப்பினும் அடுத்தடுத்த தலைமுறையினருடன் அவர் சகஜமாக இணைந்து பயணிப்பதும், பேசுவதும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal haasan opens up about Prabhu deva cini field bigg boss

People looking for online information on Amir dance, Bigg Boss 5, Bigg Boss OTT, Bigg Boss Tamil 5, Dance, Grand finale, KAMALHAASAN, Prabhu Deva, Vijay Television will find this news story useful.