www.garudabazaar.com
iTechUS

தம்பின்னு சொல்லாம சகா -னு சொன்னதும் நெகிழ்ந்த விக்ரமன் bigg boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 -ன் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது.

Kamal Haasan letter to Vikraman in BiggBoss6 Grand Finale

                                           Image Credit : Vijay Television

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றங்கள் நடைபெற்ற பிறகு வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே எஞ்சி இருந்தனர். இன்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே-வில் கமல் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த போட்டியாளர்களிடம் பேசினார். அவர்களது பிக்பாஸ் வீடு பற்றிய அனுபவங்கள் குறித்து கேள்வியும் எழுப்பி இருந்தார். அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.

Image Credit : Vijay Television

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன் அங்கு பிக்பாஸ் கோப்பையை அறிமுகம் செய்தார். அதன்பின்னர் மூவருக்கும் தான் எழுதிய கடிதத்தையும் கொடுத்தார். விக்ரமனுக்காக கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில், "சகா விக்ரமனுக்கு, இந்த நிலையிலும் கண்ணியத்தை சரிய விடாமல், கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசியிருக்கிறீர்கள். வெறும் வார்த்தைகளாக மட்டுமில்லாமல், சொல்லும் செயலும் ஒன்றாக நடந்து காட்டி இருக்கிறீர்கள். நீங்களும் நானும் சேர்ந்து கொண்ட பயணமும் பாதையும் ஒன்றுதான். மண்மொழி மக்களுக்காக என்றும் களத்தில் நிற்போம். மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் நான் கமல்ஹாசன்" என குறிப்பிட்டு இருந்தார்.

Image Credit : Vijay Television

தொடர்ந்து விக்ரமன் கமல் ஹாசன் தனக்காக எழுதிய கடிதம் பற்றி பேசுகையில், " தம்பின்னு கூட இல்லாமல் சகா-ன்னு போட்டு இருக்கீங்களே" என விக்ரமன் கூறியதும் பேச தொடங்கும் கமல்ஹாசன், " எழுதிட்டு உள்ளம் கவர்ந்த அதெல்லாம் பாத்துட்டு சரின்னு இப்படி மாத்துனது" என தெரிவித்தார். "இது வந்து எனக்கு பெரிய ஹானர் அண்ணே" என்றும் உணர்ச்சி பொங்க விக்ரமன் குறிப்பிட்டு இருந்தார்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan letter to Vikraman in BiggBoss6 Grand Finale

People looking for online information on Biggboss6Tamil, Kamal Haasan, Vikraman will find this news story useful.