‘Jail செட்டப்! பிக் பாஸ் இல்லங்க.. இது சேனாபதியோட கோட்டை’- வைரலாகும் இந்தியன் 2 ஸ்டில்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 19, 2019 03:29 PM
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில், நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த், விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கமல்ஹாசன் பங்கேற்றுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் வடிவமைத்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்த்ரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஷெடியூலில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளா ஜெயில் செட்-அப்பில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார். அந்த ஜெயில் செட்-அப்பின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.