"Cutting Plier பாத்தாலே இவர் ஞாபகம் தான்.." விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய ஜாபர் சாதிக்.. Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த விக்ரம் திரைப்படம், பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று (03.06.2022) திரையரங்களில் வெளியாகி இருந்தது.

Jaffer Sadiq exclusive interview about vikram movie

ரசிகர்கள் எந்த அளவுக்கு எதிர்பார்த்து காத்திருந்தார்களோ, அதனை லோகேஷ் பூர்த்தி செய்து விட்டதாக பலரும் விக்ரம் படத்திற்கு, சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர்.

கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்து நடித்திருந்த விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரின் நடிப்பும் அதிக அளவில் பேசப்பட்டிருந்தது.

விக்ரம் படத்தில் கலக்கிய ஜாபர் சாதிக்

அதே போல, பாவ கதைகள் அந்தாலஜியில், விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த "லவ் பண்ணா உட்றனும்" பகுதியில், நரிக்குட்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து, பலரையும் மிரள வைத்த ஜாபர் சாதிக், விக்ரம் படத்திலும், சிறப்பான காதாபாத்திரம் ஒன்றை செய்துள்ளார். அவரது நடிப்பிற்கும், பல தரப்பிலான மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை ஜாபர் சாதிக் அளித்துள்ளார்.

Jaffer Sadiq exclusive interview about vikram movie

லோகேஷ் அண்ணா தான்..

அதில் பேசிய ஜாபர், "பாவ கதைகள் பார்த்து விட்டு லோகேஷ் அண்ணா தான் என்னை அழைத்தார். கமல் படத்தை இயக்குகிறேன். நடிக்கிறியா என்றும் கேட்டார். அப்படி தான் இந்த பயணம் ஆரம்பித்தது. பாவ கதைகளில் நான் நடித்திருந்த காட்சிகளை பல முறை பார்த்து லோகேஷ் ரசித்ததாக அவரது இணை இயக்குனர் என்னிடம் தெரிவித்தார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்றார்.

Jaffer Sadiq exclusive interview about vikram movie

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி

தொடர்ந்து பேசிய ஜாபர், Cutting Pleir கொண்டு படத்தில் செய்யும் காட்சிகள் குறித்தும் பேசினார். அதே போல, விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி பேசிய ஜாபர், "முதல் நாளில் விஜய் சேதுபதியுடன் நடித்த போது அவர் என்னை அழைத்தார். என்னுடைய வாய்ஸில் பேச வேண்டும் என கூறினார். பாவ கதைகளில் வேறு குரல் என்பதால், நான் பேசியதும் 'இது தான் உன்னுடைய குரலா?. சரி' என விஜய் சேதுபதி கூறினார். படத்தின் ஷூட்டிங் முழுவதும் நாங்கள் ஜாலியாக தான் இருந்தோம்" என ஜாபர் தெரிவித்தார்.

இது போல, விக்ரம் படம் தொடர்பாக, இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்களையும் ஜாபர் சாதிக் பேசி இருந்தார். இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

"CUTTING PLIER பாத்தாலே இவர் ஞாபகம் தான்.." விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய ஜாபர் சாதிக்.. EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jaffer Sadiq exclusive interview about vikram movie

People looking for online information on Anirudh Ravichander, Fahadh Faasil, Jaffer Sadiq, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.