"அஜித்தின் பேச்சும், பண்பும் தான் அவரை"...! நேர்கொண்ட பார்வை Judge நெகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 05, 2019 05:18 PM
நேர்கொண்ட பார்வை படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட ரிலீஸ் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அஜித்தின் ஒவ்வொரு படத்திலும் படப்பிடிப்பு தளத்திலும் நிச்சயம் ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்வுகள் இருக்கும். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்திலும் படப்பிடிப்பிலும் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து படத்தில் நீதிபதியாக நடித்துள்ள டி.ராமசந்திரன் Behindwoods தளத்திற்கு அளித்த பேட்டியில் அஜித்தின் பணிவான பேச்சும், பண்பும் தான் அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது என நேரில் பார்த்த போதே தெரிந்துகொண்டேன்.
எனக்கு முதல் படம் இது. முதல் நாளே நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது கோர்ட் சீன் எடுக்கப்பட்டது. அஜித் வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லி என்னையும் வரவேற்று பேசினார்.
அவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவர் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை. என்னுடன் அவர் தன்னுடைய எல்லா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இரண்டாம் நாளே என்னோடு தான் நீங்கள் மதிய உணவு சாப்பிடவேண்டும் என கூறி பலரையும் தன்னுடன் வைத்திருந்தார்.
படத்தில் அவர் வழக்கறிஞராக ஒவ்வொரு வசனமும் பேசும் போது உணர்ச்சிவசமாக இருந்தது. அவர் கதாபாத்திரமாகவே மட்டுமில்லாமல் நிஜ வழக்கறிஞராக இருந்தார் என கூறியுள்ளார்.
"அஜித்தின் பேச்சும், பண்பும் தான் அவரை"...! நேர்கொண்ட பார்வை JUDGE நெகிழ்ச்சி வீடியோ