தல, தளபதியை இணைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்த ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தும், தளபதி விஜய்யும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் இணைந்து வேறு எந்த படத்திலும் நடிக்க வில்லை.

Lee Whittaker Speaks About Thala Ajith and Thalapathy Vijay

இருவரும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்கள். இருவரும் இணைந்து நடிக்கவில்லையே தவிர இருவரும் அவ்வப்போது சந்தித்து நட்பு பாராட்டிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் Behindwoods தனது பேஸ்புக் பக்கத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் சரிசமமாக கையாளும் இயக்குநர் ஒருவரை சொல்லுங்கள் என்ற கேள்வியை ரசிகர்களிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பிரபல ஹாலிவுட் இயக்குநர், லீ விட்டேக்கர், அதற்கு நீங்கள் ஆக்ஷன் இயக்குநர் லீ விட்டேக்கரை தான் அணுக வேண்டும் என்று தெரிவித்தார்.