www.garudabazaar.com

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 .. படப்பிடிப்பில் இணையும் முக்கிய ஹீரோயின்.. Shoot எங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் இணைவது குறித்த அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Kajal Agarwal joined Kamal Hassan Indian 2 shoot Indian2 Update

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

Kajal Agarwal joined Kamal Hassan Indian 2 shoot Indian2 Update

பின்னர், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் சமீபத்திய திருப்பதி படப்பிடிப்பு நிறைவடைய, நடிகர் கமல்ஹாசன் & இயக்குனர் ஷங்கர் என படக்குழுவினர், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோஸில் நடப்பதாக அறியப்படும் இப்படப் பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் இணைந்துள்ளதாகவும், அங்கு பகல் இரவு என இரு நேர கால்ஷீட்டிலும் ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kajal Agarwal joined Kamal Hassan Indian 2 shoot Indian2 Update

முன்னதாக இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்கா நாட்டில் 15 நாட்கள் நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்திருந்தன. படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்வதற்கான  விசா நடைமுறைகள் முடிந்ததும் அந்த தேதிகள் முடிவாகும் என தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Agarwal joined Kamal Hassan Indian 2 shoot Indian2 Update

People looking for online information on Indian2 Update, Kajal Aggarwal, Kamal Haasan, Shankar will find this news story useful.