www.garudabazaar.com

"சாதி இழிவை ஒழிக்கும் கருவி காதல்".. உலகநாயகன் கமல்ஹாசன் பரபர ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதலர் தினத்தையொட்டி நடிகர் & அரசியல்வாதி கமல்ஹாசனின் ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Ulaga Nayagan Kamal Haasan Tweet about Valentines day and Love

Images are subject to © copyright to their respective owners.

கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.

கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டும் வருகிறார்.

மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர். சமீபத்தில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். பா. ரஞ்சித்தின் நீலம் புத்தக நிலையத்தின் திறப்பு விழாவிலும் சமீபத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Ulaga Nayagan Kamal Haasan Tweet about Valentines day and Love

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தையொட்டி ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில், "சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்". என கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ulaga Nayagan Kamal Haasan Tweet about Valentines day and Love

People looking for online information on Kamal Haasan, Love will find this news story useful.