www.garudabazaar.com

Madhavan : ஆஹா.. திரும்பவும் க்ரஷ் ஆயிட்டாப்ல😍..! க்ளீன் ஷேவுடன் மாதவனின் அசத்தலான நியூ லுக்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்.மாதவன் தமிழில் அலைபாயுதே, என்னவளே உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.

actor R Madhavan New Look trending நடிகர் மாதவன்

தொடர்ந்து கௌதம் மேனனின் மின்னலே திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் ரீச் ஆனார். தவிர டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டாய், ரன், அன்பே சிவம், பிரியமான தோழி, ஆய்த எழுத்து என பல திரைப்படங்களில் நடித்த மாதவன் ஒரு லவ்லி பாய் ஹீரோவாக பலருக்கும் ஃபேவரைட் நடிகரானார்.

இவை தவிர தம்பி, எவனோ ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார். யாவரும் நலம் உள்ளிட்ட மாறுபட்ட திரைப்படங்களிலும் நடித்த மாதவன் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். சில வருடங்கள் தமிழில் பிரேக் எடுத்துக் கொண்ட நடிகர் மாதவன் பிறகு தமிழில் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராக்கெட்ரி : நம்பி விளைவு என்கிற திரைப்படத்தை இயக்கிய நடித்து இருந்தார். தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மாதவனின் புது லுக் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் மாதவனின் பழைய முகத்தை புதுப்பொலிவுடன் நினைவூட்டுகிறது என ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

actor R Madhavan New Look trending நடிகர் மாதவன்

90களில் மாதவன் பிரபலமானபோது பலருக்கும் மாதவன் க்ரஷ் ஆனதாக கூறப்படுவது உண்டு. ஆனால் திரைப்படங்களுக்காக மாதவன் வித்தியாசமான கெட்டப்பில் தாடியும் அதிக தலைமுடியுமாக இருந்தார். இந்நிலையில் தற்போது கிளீன் ஷேவ் பண்ணி கொண்டு, மாதவன் வெளியிட்டுள்ள நியூ லுக் அனைவர் மத்தியிலும் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புது கெட்டப் ஒரு புதுப்படத்துக்காக என அவர் தெரிவித்துள்ளார். 

Tags : Madhavan

தொடர்புடைய இணைப்புகள்

actor R Madhavan New Look trending நடிகர் மாதவன்

People looking for online information on Madhavan will find this news story useful.