www.garudabazaar.com

கமல்ஹாசன் மடியில் பா. ரஞ்சித்தின் மகன்.. இணையத்தில் வைரலாகும் CUTE PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

Pa Ranjith family with Kamal Haasan Viral Photos

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அக்கா நக்மாவுடன் தங்கை ஜோதிகா.. திருமண விழாவில் குழந்தைகளுடன் வைரல் போட்டோஸ்!

இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.

இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

Pa Ranjith family with Kamal Haasan Viral Photos

Images are subject to © copyright to their respective owners.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை  இயக்கினார். இந்த படத்தில்  காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Pa Ranjith family with Kamal Haasan Viral Photos

Images are subject to © copyright to their respective owners.

தற்போது நடிகர் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார். சென்னை எழும்பூர் மிடில்டன் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், தெருகுரல் அறிவு உள்ளிட பலரும் பங்கேற்றனர். கமல்ஹாசன் புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

Pa Ranjith family with Kamal Haasan Viral Photos

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் கமல்ஹாசன் புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையும் ஆற்றினார். புத்தக நிலையத்தில் பா.ரஞ்சித் குடும்பத்தினர் நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பா.ரஞ்சித்தின் மகனை மடியில் அமரவைத்து இந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் காட்சியளிக்கிறார். பா. ரஞ்சித் மனைவி மற்றும் மகள்களும் இந்த புகைப்படத்தில் காட்சியளிக்கின்றனர்.

Also Read | குரங்கோடு செல்ஃபி எடுத்த அமலாபால்.. வெளிநாட்டில் Solo டூர்.. செம்ம ட்ரெண்டிங் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith family with Kamal Haasan Viral Photos

People looking for online information on Kamal Haasan, Pa Ranjith will find this news story useful.