www.garudabazaar.com

ஜிகுஜிகுனு மின்னுதே.. மாடர்ன் அவுட்ஃபிட்டில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்.. trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த ஆண்டு நடித்த சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Keethi Suresh new outfit viral pictures கீர்த்தி சுரேஷ்

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் கே.சந்துரு இயக்கும் ‘ரிவால்வர்’ ரீட்டா’ எனும் பெண்கள் சார்ந்த  திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதேபோல் நடிகர் நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா எனும் பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படமும் வரும் 30.3.2023 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் புதிய மாடர்ன் ஆடைகள் அணிந்து வெளியிட்டுள்ள ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கீர்த்தி சுரேஷ் திரையுலகத்தில் எண்ட்ரி கொடுத்ததில் இருந்து தற்போது வரையிலான அவரது லுக் வேற லெவல் டிரான்ஸ்ஃபர்மேஷன் என தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Keethi Suresh new outfit viral pictures கீர்த்தி சுரேஷ்

People looking for online information on Keerthi Suresh, Keerthi Suresh new look, Keerthi Suresh trending will find this news story useful.