www.garudabazaar.com

"அண்ணாமலையாரின் பெருங்கருணை".. மஹாசிவராத்திரியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சி போஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகாசிவராத்திரியை முன்னிட்டு குருதேவ் ரவிசங்கர் ஆஷ்ரமத்திற்கு சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Director aishwarya rajinikanth at sri sri ravishankar Ashramam

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு.." - மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ரஜினி உருக்கம்

தமிழகத்தில் நேற்று முன்தினம் மகாசிவராத்திரி விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களுக்கு அருகே உள்ள சிவ ஸ்தலங்களில் கண்விழித்து சிறப்பு ஆராதனை நிகழ்விலும் கலந்துகொண்டனர். அந்த வகையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆன்மீக குருவான ரவிசங்கர் ஆஷ்ரமத்திற்கு சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறார்.

Director aishwarya rajinikanth at sri sri ravishankar Ashramam

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Director aishwarya rajinikanth at sri sri ravishankar Ashramam

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தி வரும் மகா சிவரத்திரி விழாவில் தனது மனைவி லதாவுடன் தியானத்தில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், அங்கு அமர்ந்தபடி தியானம் செய்த புகைப்படங்களும் வைரலாகின. மேலும், தனது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் கொண்டாடியதாக ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Director aishwarya rajinikanth at sri sri ravishankar Ashramam

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றும் இன்றும் ஆன்மீக வழியிலான நாட்களாக அமைந்ததாகவும், அண்ணாமலையாரின் ஆசியினால் ஒரே நாளில் தனது பெரியப்பாவின் 80 வது பிறந்தநாள் மற்றும் சகோதரரின் 60-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், மகாசிவராத்திரி பெருவிழாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆஷ்ரமத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டதாகவும் தனது ஸ்டோரியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "மகா சிவராத்திரி".. ஈஷா யோகா மையத்தில் தமன்னா.. பரவச நடனம் ஆடிய நடிகை.. வீடியோ!!

தொடர்புடைய இணைப்புகள்

Director aishwarya rajinikanth at sri sri ravishankar Ashramam

People looking for online information on Aishwarya Rajinikanth, Sri sri ravishankar Ashramam will find this news story useful.