www.garudabazaar.com

ஆத்விக் அஜித்தை கொஞ்சிய ISL சென்னை அணி உரிமையாளர் அபிஷேக் பச்சன்.. வைரலாகும் CUTE வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Abhishek Bachchan meet Shalini Ajith and Aadhvik Ajith Kumar

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.

சமீபத்தில் நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் மகன் ஆத்விக் அஜித்குமார், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ISL கால்பந்து போட்டியை காண வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. சென்னையின் FC & North East FC மோதும் இந்த போட்டியை காண சென்னை அணியின் சீருடை அணிந்து ஆத்விக் அஜித்குமார் வந்திருந்தார்.

Abhishek Bachchan meet Shalini Ajith and Aadhvik Ajith Kumar

இந்த புகைப்படத்தை சென்னை அணி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது. அந்த போட்டியின் போது சென்னையின் FC அணி உரிமையாளர் அபிஷேக் பச்சன், ஷாலினி அஜித்குமார் & ஆத்விக் அஜித்குமார் அமர்ந்திருந்த கேலரி நோக்கி வந்து ஷாலினியிடம் பேசினார். மேலும் அங்கு நின்றிருந்த தமது மகன் ஆத்விக் அஜித்குமாரை அபிஷேக் பச்சனுக்கு ஷாலினி அறிமுகம் செய்து வைத்தார். உடனே ஆத்விக்கை உச்சந்தலை கோதி நடிகர் அபிஷேக் பச்சன் கொஞ்சினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

அபிஷேக் பச்சன் தந்தை அமிதாப் பச்சன் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் உல்லாசம் படத்தில் நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

ஆத்விக் அஜித்தை கொஞ்சிய ISL சென்னை அணி உரிமையாளர் அபிஷேக் பச்சன்.. வைரலாகும் CUTE வீடியோ வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Abhishek Bachchan meet Shalini Ajith and Aadhvik Ajith Kumar

People looking for online information on Aadhvik AjithKumar, Ajith Kumar, Shalini Ajith will find this news story useful.