“உசிர கூட தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு..!”- பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிகிரி தோஸ்து Moment!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டிற்குள் கவின், தர்ஷன் ஆகியோர் மீண்டும் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது

Bigg Boss 3 Losliya, Kavin, Sherin, Sandy, Promo Video

பிக்பாஸ் நிகழ்ச்சி 103வது நாளை எட்டியுள்ளது. இதன் பினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனும் கவினும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்

பிக்பாஸ் வீட்டில் இருந்து, கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த வாரம் வெளியேறினார். லாஸ்லியா, சாண்டி என ஹவுஸ்மேட்ஸ்கள் கதறி அழுதும் கேட்காத கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டார். டைட்டில் வின்னராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது, பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏமாற்றத்தையும் அளித்தது

இந்நிலையில் அவர்கள் இருவரையும் இன்று விருந்தாளிகளாக அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அவர்களை, சாண்டி, முகென் என ஹவுஸ்மேட்ஸ்கள் கட்டியணைத்து வரவேற்று தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

“உசிர கூட தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு..!”- பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிகிரி தோஸ்து MOMENT! வீடியோ