‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...!’ - மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியா அப்பா!!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 04, 2019 01:02 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. கவின் மற்றும் தர்ஷனின் எவிக்ஷனையடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சாண்டி, லாஸ்லியா, முகென், ஷெரின் ஆகியோர் உள்ளனர். இவர்களில் முகென் இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் ‘கோல்டன் டிக்கெட்டை’ பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஷெரின், சாண்டி, லாஸ்லியா இடையே முகெனுடன் போட்டியிடும் அந்த போட்டியாளர் யார் என்பது வரும் நாட்களில் தெரிய வரும். இதனிடையே, இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோவில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் மற்றும் கவின் ரீ-எண்ட்ரி கொடுத்தனர்.
அதையடுத்து, வெளியான இரண்டாவது புரொமோ வீடியோவில், இறுதிப்போட்டிக்காக கடுமையாக விளையாடி வரும் லாஸ்லியாவை அவரது தந்தை உற்சாகப்படுத்தும் விதமாக வீடியோ காலில் பேசினார். வெளிநாட்டில் இருக்கும் லாஸ்லியாவின் தந்தை கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து, தனது மகளை மக்கள் முன்னிலையில் கண்டித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது மகளுக்கு அவர் அளித்த உற்சாகமும் அனைவரையும் கவரும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.
‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...!’ - மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியா அப்பா!!! வீடியோ