“நடுவுல என் இடம் மட்டும் Missing..” - ‘தளபதி 64’ குறித்து ‘பிகில்’ பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தனது அடுத்தப்படத்திற்கான பணியை துவங்கியுள்ளார்.

Bigil star Kathir says missing in Thalapathy 64 Poojai still

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நேற்று (அக்.3) பூஜையுடம் தொடங்கியது. ‘மாநகரம்’, ‘கைதி’ திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் பூஜை புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் கதிர், ‘என்னோட அண்ணன்கள் எல்லாம் ஒரே ஃபிரேமில்.. அவங்களுக்கு நடுவுல என்னோட குட்டி இடம் மட்டும் மிஸ்ஸிங்’ என கூறி படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.