''உன்னால தர்ஷன் வெளியே போகல'' - தர்ஷன் விவகாரத்தில் பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் கடந்த வாரம் வெளியேறினார். இதற்கு பிக்பாஸ் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

Sathish tweets about Tharshan, Sherin, Vanitha's Bigg Boss 3

இந்நிலையில் தற்போது உள்ளே வந்த வனிதா, ஷெரினிடம் தர்ஷன் வெளியேறுவதற்கு நீயும் ஒரு காரணம் என்பது போல தெரிவிக்க, மீண்டும் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. கஸ்தூரி ஷெரினுக்கு ஆதரவாகவும், வனிதா எதிராகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் சதீஷ்தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீ பண்ணது தப்புனு சொல்லல. ஆனா நீ பண்ணது தப்பு, உன்னால தர்ஷன் வெளியே போகல.. ஆனா சத்தியமா உன்னால தான் வெளியே போனார். எல்லோரும் அவங்க கருத்தை சொல்லுங்க ஆனா நான் யாரையும் பேச விடமாட்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.