House Keeping-க்கு வந்தீங்களா..? - ஷெரினை கலாய்த்த முன்னாள் பிக் பாஸ் பிரபலம் - புரொமோ வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 03, 2019 12:08 PM
விஜய் டிவி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 102 நாட்களை நிறைவு செய்துள்ளது. தற்போது முகேன், ஷெரின், லாஸ்லியா, சாண்டி இந்த நால்வரில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று இந்த நிகழ்ச்சியில் கமல் அடிக்கடி சொல்லுவார். அதற்கேற்ப கடந்த வாரம் இந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி அவர் தான் டைட்டில் பெறுவார் என்ற தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டு பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதனையடுத்து எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறிய ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப வந்துகொண்டிருக்கின்றனர். வனிதா நேற்று உள்ளே வந்து ஒரு பெரிய களேபரமே செய்தார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரும் கலக்கப்போவது யார் நடுவருமான தாடி பாலாஜி, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா, ரியோ ராஜ், மாகபா ஆனந்த், ரக்ஷன் உள்ளே வந்து போட்டியாளர்களை மகிழ்வித்தனர்.தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் ரியோ , பாலாஜி இருவரும் ஷெரின் தமிழ் பேசுவதை கலாய்த்து பிக்பாஸ் வீட்டையே குதூகலமாக மாற்றியுள்ளனர்.
HOUSE KEEPING-க்கு வந்தீங்களா..? - ஷெரினை கலாய்த்த முன்னாள் பிக் பாஸ் பிரபலம் - புரொமோ வீடியோ வீடியோ