இந்த வார எவிக்சன் சாண்டியா? முன்னாள் பிக் பாஸ் பிரபலத்தின் அட்டகாசமான பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 20, 2019 01:03 PM
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாண்டி வெளியேறிவிடுவார் என்று கூறிய ரசிகருக்கு நக்கலாக பதில் கொடுத்து வெறுப்பேற்றியுள்ளார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் காஜல்.

பிக்பாஸ் வீட்டின் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் தர்ஷனும் சாண்டியும் முதல்முறையாக இடம்பெற்றுள்ளனர். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், சாண்டி இந்த வாரம் வீட்டுக்கு போகிறார் ஜி. 5 பேர் கேங்கில் இந்த வாரம் ஒருவர் வீட்டுக்கு போக போகிறார். சேரன் அல்லது கஸ்தூரி குறைந்த வாக்குகள் பெற்று ரகசிய அறைக்கு போவார்கள். சாண்டி கன்டென்ட் கொடுக்க கொஞ்சமும் பயன்படாதவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனை பார்த்த காஜல், அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உண்மையாக.. இந்த ஆண்டின் சிறந்த ஜோக் என்று சிரிக்கும் ஈமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும் உங்கள் கனவில் கூட அது நடக்காது என்றும் கூறியுள்ளார் காஜல்.
Really! Joke of the year😀😂... Won't happen even in your dreams bro https://t.co/5Wo8iidftk
— Kaajal Pasupathi (@kaajalActress) August 20, 2019