ரிலீசுக்கு தயாரான த்ரிஷாவின் அடுத்தப்படம் - விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ஜனை’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Trisha's Garjanai releasing on September 6, trailer out tomorrow

விஜய் சேதுபதியுடன் ‘96’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா தற்போது கைவசம் சில திரைப்படங்களை வைத்துள்ளார். அதில், சுந்தர்.பி என்பவர் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ‘கர்ஜனை’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு ஹிந்தியில் நவ்தீப் சிங் நடித்த ‘NH10’ படத்தை தழுவி உருவான இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஆக.21) ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வரும் செப்.6ம் தேதி ரிலீசாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையுலகில் 16 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள த்ரிஷா, ‘சதுரங்க வேட்டை 2’, ‘பரமபத விளையாட்டு’,‘ராங்கி’, இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறார்.