www.garudabazaar.com

மலையாள சினிமாவில் ரீஎன்ட்ரி.. மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா!! Official Update!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து ஜோதிகா நடிக்க உள்ள திரைப்படத்தின் போஸ்டர் அதிகாரபூர்வமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Jyotika to act in malayalam with mammootty directed by jeo baby

மலையாள திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் மம்மூட்டி.

மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் கூட, பீஷ்ம பர்வம், சிபிஐ 5, புழு, ரோஸாக் உள்ளிட்ட திரைப்படங்கள் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி உள்ளது. இவை அனைத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து சிறப்பான படங்களை மம்மூட்டி கொடுத்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, 'கிறிஸ்டோபர்', 'நண்பகல் நேரத்து மயக்கம்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் மம்மூட்டி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், மம்மூட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளி வந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு, பெண்களை மையப்படுத்தி கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் நடிகை ஜோதிகா, இதுவரை ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தொடர்ந்து, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மம்மூட்டியுடன் இணைந்து புதிய மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதுகுறித்த அதிகாரபூர்வ போஸ்டரை நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரும் வெளியாகி உள்ளது. "காதல் - The Core" என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 'கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த ஜியோ பேபி இந்த திரைப்படத்தையும் இயக்க உள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், காதல் - The Core படத்தின் போஸ்டர்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Jyotika to act in malayalam with mammootty directed by jeo baby

People looking for online information on Jeo Baby, Jyotika, Kaathal The Core, Mammootty will find this news story useful.